கோலிக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர்-ஆப்கானிஸ்தான் தொடரில் ரஹானே கேப்டன்
ஆப்கானிஸ்தான் தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க உள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். பெங்களுரூ ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகப் பட்டையைக் கிளப்பி வரும் கோலி, விரைவில் இங்கிலாந்து கிரிக்கெட் லீக் தொடர் ஒன்றிலும் விளையாட உள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் எவ்வளவு பிரபலமோ அதுபோல், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடர் வெகு பிரபலம். அந்தக் கிரிக்கெட் தொடரில் கவுண்டி சர்ரே அணிக்காக ஜூன் மாதம் முழுவதும் விளையாடுவதற்காக விராட் கோலி ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜூன் மாதம் முழுவதுமாக கவுண்டி தொடரில் விளையாடும் விராட் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா பங்குபெறும் டெஸ்ட் தொடரில் பாதியில் கோலி இணைந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேப்டன் கோலி வரும் வரையில், கோலிக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க உள்ளார். மேலும் இந்த டெஸ்ட் தொடரில் கேப்டனாக அணியை அஜிங்க்யா ரஹானே வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி, ஆப்கானிஸ்தான் டெஸ்ட் மட்டுமல்லாது அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியிலிருந்தும் விடுப்பு எடுத்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com