அரிசியில் உருவாக்கப்பட்ட 2 இன்ச் ஐயப்பன் சிலை : கல்லிடைக்குறிச்சி ஓவிய ஆசிரியர் அபாரம்
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர் ஒருவர், அரிசியை கொண்டு இரண்டு இன்ச் அளவில் ஐயப்பன் சிலையை செய்து அசத்தியுள்ளார்
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது கலைத்திறமையை வெளி உலகத்திற்கு காட்டும் வகையில், பல்வேறு சிற்பங்களை அரிசியில் வடிவமைத்து வருகிறார் . திருவள்ளுவர் , கருணாநிதி, பெரியார் அண்ணா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளை அரிசியில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
தஞ்சை பெரிய கோயில் சிலையையும் அரிசியில் அழகாக வடிவமைத்து அசத்தியுள்ளார். தற்போது , சபரிமலை ஐயப்பன் சிலையை மிக தத்ரூபமாக அரிசியில் உருவாக்கி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். பல்வேறு சாதனைகளை படைக்கும் தனக்கு அரசு பள்ளியில் வேலை வாய்ப்பினை வழங்கிட வேண்டுமென்பதே சரவணனின் கோரிக்கையாக உள்ளது.