அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு : நிறுவனர் ஹென்றி அறிவிப்பு

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA), , தேசிய அளவில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் ஒருங்கிணைத்து, 2012-ஆம் ஆண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்ப்பட்டது. தற்போது தேசிய அளவில் 14 மாநிலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் FAIRA கூட்டமைப்பின் கிளைகள் ஆக்கப்பூர்வைமாக இயங்கி வருகின்றன. இந்த அமைப்பின் நிறுவனர் ஹென்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

''அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிர்வாகத்திற்கான தேசிய மற்றும் மாநில அளவிலான பொறுப்பாளர்களை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுப்பது வழக்கம். தற்போது 2026 - 2027 ஆம் ஆண்டிற்கு எட்டாவது தேசிய மற்றும் மாநில குழு பொறுப்பாளர்களுக்கான தேர்தல் கடந்த நவம்பர் 30ம் தேடித சென்னையில் அமைந்துள்ள பெயிரா கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய குழு, மற்றும் மாநில லே-அவுட் புரமோட்டர்ஸ் குழு, பில்டர்ஸ் குழு, ஆர்க்கிடெக்ட் மற்றும் இன்ஜினியர்ஸ் குழு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில குழு என கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேசிய குழுவிற்கு பொதுச் செயலாளராக ஜெயச்சந்திரன், செயல் செயலாளராக கோவை செந்தில்குமார், நிர்வாகச் செயலாளராக அரியலூர் கிருஷ்ணகுமார், வளர்ச்சிச் செயலாளராக திருவண்ணாமலை நரேஷ்சந்த், பொருளாளராக சிகரம் சந்திரசேகர், துணைத் தலைவர்களாக கிங்மேக்கர்ஸ் ராஜசேகர் பிரசன்னகுமார், செயற்குழு தலைவராக வசந்தம் ஜவஹர், ஆலோசனை குழு தலைவராக நேரு நகர் நந்து, அமைப்புச் செயலாளராக வெங்கட்ராஜ் மற்றும் ராஜா பக்ருதீன் அலி அகமது, ஒருங்கிணைப்பாளர்களாக ஜெயராம் ,உதயகுமார், இணைச்செயலாளர்களாக பாலசண்முகம் கார்மேகம், துணைச் செயலாளர்களாக பாபு, பாலசுப்பிரமணி, துணைப் பொருளாளராக சக்திவேல், ஆலோசனைக் குழு துணை தலைவராக செல்வம், செயற்குழு துணைத் தலைவராக லூர்துராஜ் பிரேம், ஆலோசனை குழு உறுப்பினர்களாக தனபால், தமிழரசன், கிஷோர், ஜெய்சங்கர், நிவாஸ், மோகன், கருப்பையா ராஜா, அசோக் ராஜா, ஹலீல் பாய்ஸ் மற்றும் லோகேஷ், செயற்குழு உறுப்பினர்களாக முனைவர் உசைன், முனீஸ்வரன், வழக்கறிஞர் மோகன் சுரேந்தர்ராஜ், சத்தியவேடு சீனிவாசன், ஹைதராபாத் மகேஷ் பாபு, மும்பை ரஞ்சித்குமார், பாலக்காடு வில்சன் பி. தாமஸ், தலைமை நிலைய செயலாளராக கார்த்திக் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநில லே-அவுட் புரமோட்டர்ஸ் குழுவிற்கு மாநில தலைவராக கும்பகோணம் பாலாஜி, பொதுச் செயலாளராக அச்சரப்பாக்கம் சிவக்குமார், செயல் செயலாளராக கிளமெண்ட் ரோசாரியோ, நிர்வாகச் செயலாளராக மாறன், வளர்ச்சி செயலாளராக கணேசன், பொருளாளராக ருனானா ஆகியோரும்

மாநில பில்டர்ஸ் குழுவிற்கு மாநிலத் தலைவராக கண்ணன் நந்தகுமார், பொதுச் செயலாளராக கமலஹாசன், செயல் செயலாளராக சாமிநாதன், நிர்வாக செயலாளராக கார்த்திக், வளர்ச்சி செயலாளராக விஜயபாரதி, பொருளாளராக கோவை கணேஷ்குமார், செயற்குழு தலைவராக திரு.கோவை ராமநாதன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநில பில்டர்ஸ் குழுவிற்கு மாநிலத் தலைவராக கண்ணன் நந்தகுமார், பொதுச் செயலாளராக கமலஹாசன், செயல் செயலாளராக சாமிநாதன், நிர்வாக செயலாளராக கார்த்திக், வளர்ச்சி செயலாளராக விஜயபாரதி, பொருளாளராக கோவை கணேஷ்குமார், செயற்குழு தலைவராக திரு.கோவை ராமநாதன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

ஆர்க்கிடெக்ட் மற்றும் இன்ஜினியர்ஸ் குழுவிற்கு மாநில தலைவராக பாலசுப்பிரமணி, பொதுச் செயலாளராக கும்பகோணம் சம்பத், செயல் செயலாளராக ரமேஷ் குமார், நிர்வாக செயலாளராக ஹரிகிருஷ்ணன், வளர்ச்சி செயலாளராக ராம்காந்த், பொருளாளராக சுரேஷ்குமார், துணை தலைவர்களாக ஜெய் சசிகுமார், யோகநாதன் ஆகியோரும்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில தலைவராக அன்பரசு, பொதுச் செயலாளராக அமர் என்கிற திரு.மணிசேகர், செயல் செயலாளராக கோபாலகிருஷ்ணன், நிர்வாக செயலாளராக சுரேஷ்குமார், வளர்ச்சி செயலாளராக சக்திவேல், பொருளாளராக முத்து என்கிற முத்தாலப்பன், ஆலோசனை குழு தலைவராக திரு.முத்துக்குமரன், துணை தலைவராக திரு.ஆனந்தன், அமைப்புச்செயலாளராக திரு.கந்தன், துணைச் செயலாளராக திரு.கனகராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் கடமையை உணர்ந்து கண்ணியம் காத்து, பொறுப்புடனும், ஆக்கபூர்வமாகவும், அறிவார்ந்தும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்துகிறேன். நிச்சயம் கட்டுமானம் மற்றும் மனை வணிகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் இவர்களின் பணியும் செயல்பாடுகளும் உறுதுணையாக அமையும் என்பதனை உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன்.''

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More News >>