சிக்கலில் ஏர் இந்தியா- கட்டுப்பாடுகளால் தனியார்கள் வாங்கத் தயக்கம்
’ஏர் இந்தியா’ விமான நிறுவனத்தை மத்திய அரசு விற்க முன்வந்தாலும் தனியார்கள் யாரும் வாங்கத் தயாரக இல்லை.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் உள்ளது. இந்தியாவின் பழம்பெரும் விமான நிறுவனமான ‘ஏர் இந்தியா’ சமீப காலமாக பெரும் கடன் தொல்லைகளால் சிக்கலில் இருந்து வந்தது.
இந்நிலையி, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், இதைத் தவிர்க்க நிறுவனத்தை தனியார் மயம் ஒப்படைக்கலாம் என்ற முடிவை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ‘ஏர் இந்தியா’ விமான நிறுவன ஊழியர்கள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால், எழுந்த பல பிரச்னைகளையும் சமாளித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாரிடன் விற்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில் மே-17ம் தேதி விற்பனையில் பங்குகளை ஏலம் எடுக்க நினைக்கு தனியார்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் தேர்வு செய்ய்ப்படும் நிறுவனங்களின் பெயர்கள் மே 28-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் மத்திய அரசு ‘ஏர் இந்தியா’ நிறுவனப் பங்குகள் வேண்டுவோரின் விண்ணப்பங்கள் மே-31வரையில் வாங்கப்படும் என்றும் ஜூன் 15-ம் தேதி தகுதி வாய்ந்த நிறுவனங்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என மாற்றியமைத்தது.
ஆனால், விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டினாலும் மத்திய அரசின் விதிமுறைகளும் ஏர் இந்தியாவை வாங்க வேண்டியதற்கான கட்டுப்பாடுகளும் ஒத்துவராமல் இருப்பதால் ஏர் இந்தியாவை வாங்க தனியார்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதே சூழல் நீடித்தால், நாட்டின் மிகப்பழமையான விமான சேவை நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்படும் என்பது உறுதியாகத் தெரிகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com