தர லோக்கல் விலையில் ஸ்மார்ட்போன்கள்- ஃப்ளிப்கார்டின் சேல் டே
ஃப்ளிப்கார்ட் விற்பனையின் கோடை கால பெரிய விற்பனை நாள் நெருங்கி வருவதால் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோருக்கு அதிரடி ஆஃபர்கள் காத்திருக்கின்றன.
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் டே சேல் ஆஃபர் வருகிற மே 13-ம் தேதி தொடங்கி மே 16-ம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பு வெளியானதுதான் தாமதம், ஆன்லைன் ஷாப்பிங் செல்வோருக்கு ஆர்வம் தாங்கவில்லை.
ஒரு ரூபாய் ஹேர்பின் முதல் 1 லட்சம் ரூபாய் ஸ்மார்ட்போன்கள் வரையில் அதிரடி ஆஃபர் மழையில் வாடிக்கையாளர்களைத் தாக்கத் தயாராகி உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்புகள் போன்ற கேட்ஜட்ஸ் பொருள்களுக்குத்தான் ஆஃபர்கள் அதிரடி விலைக்குறைப்பு உள்ளது.
கூகுள் பிக்சல் 2 மற்றும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்.எல் தான் தாறுமாறாக விலைக் குறைக்கப்பட்டுள்ளது. 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிக்சல் 2-வின் விலை 34,999 ரூபாய் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதேபொல், ஹோம் அப்லையன்ஸஸ், வீட்டுப் உபயோகப் பொருள்கள், ப்ர்னிச்சர் பொருள்கள் ஆகியவற்றுக்கும் அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிக் டே சேலின் போது ஹெச்.டி.எஃப்.சி வங்கி கார்டு மூலம் ஆன்லைன் பேமன்ட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10சதவிகித சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.