நெல்லையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு

திருநெல்வேலியில் மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் நடைபெற்றது

திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தில் சரிபார்ப்பு பணிகள் முடிந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அரசியல் கட்சி பிரதிநிதிகளில் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான சுகுமார் தலைமையில் நடைபெற்றது

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் திருநெல்வேலி ,பாளையங்கோட்டை , நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளை உள்ளடங்கியது . இந்த ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் . 1678 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன . வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்வதற்காக தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அரசியல் கட்சி பிரதிநிதிகளில் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது . இதில் அனைத்து அரசியல் கட்சி தரும் பங்கேற்றனர் .

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் கூறும் போது, '' வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 2026 எதிர்கொள்வதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்ட்ரோல் யூனிட், வி வி பேக் ஆகியவற்றை சரி செய்யும் பணி தற்போது முடிந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கூடுதலாக வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப இயந்திரங்களும் தற்போது போதிய அளவில் உள்ளன .இந்த இயந்திரங்களில் ஏதேனும் பழுது இருந்தால் அதனை சரி செய்வதற்காக பெங்களூருக்கு அனுப்பி வைக்க உள்ளோம்'' என தெரிவித்தார்

More News >>