ஸ்ரீதேவி மறைவுக்குப் பின் முதல் விசேஷம்- சோனம் கபூர் கோலாகல திருமணம்
பாலிவுட் சூப்பர் நாயகி சோனம் கபூரின் திருமணம் இன்று மும்பையில் கோலாகலத் திருவிழாவாக நடந்தது.
அனில் கபூரின் மகளான சோனம் கபூர், தனது நீண்ட கால நண்பரான ஆனந்த் அஹுஜாவை மணமுடித்தார். சீக்கிய முறைப்படு நடந்த இத்திருமணம் மும்பையில் பாந்த்ராவில் உள்ள சோனம் கபூரின் அத்தையின் பங்களா வீட்டில் கோலகலமாக நடந்தேறியது.
ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் கபூர் குடும்பத்தில் நடக்கும் முதல் விசேஷமாக சோனம் கபூரின் திருமணம் அமைந்துள்ளது. இத்திருமண நிகழ்வுக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் பாலிவுட்டின் இளைய இளவரசர் தய்மூர் அலிகான் வரையில் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.
விழாவில் சோனம் கபூரின் பெரியப்பா மகன் அர்ஜுன் கபூர் விருந்தினர்களை வரவேற்று உபசரித்தார். மேலும் ஸ்ரீதேவியின் மகள்களான ஜானவி மற்றும் குஷி கபூர் ஆகியோரும் தங்கள் அப்பா போனி கபூருடன் விழாவில் முதல் ஆளாக வந்திருந்து சிறப்பித்தனர்.
அனுராதா வகில் வடிவமைத்த சிகப்பு நிற ஆடம்பர லெஹங்காவை சோனம் கபூர் அணிந்திருந்தார். முற்றிலும் சீக்கிய முறைப்படியான திருமணம் என்பதால் ஆடை, ஆபரணங்கள், அலங்காரங்கள் என அனைத்து பாரம்பரிய வடிவமைப்புடன் இருந்தன.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com