இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் களமிறங்கினார் சோனியா காந்தி!
சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான சோனியா காந்தி இன்று கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கர்நாடக மாநில பொதுத் தேர்தல் வருகிற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பல்வேறு கட்சிகளுக்கும் இடையிலான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக களத்தில் நேரடி போட்டியில் இருக்கும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க மத்தியில் பலதரப்பிலான தளங்களிலும் கடும் போட்டி நிலவி வருகிறது.
பிரதமர் மோடியும் எடியூரப்பாவும், சித்தராமையாவுக்கும் ராகுலுக்கும் மாற்றி மாற்றி சவால் விடுத்தும் வரும் கர்நாடகா அரசியல் களத்தில் இன்று ஒரு புது மற்றம். சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியாக காந்தி தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
சோனியா தனது பிரச்சாரத்தில், “கர்நாடகா மாநிலம் காங்கிரஸ் ஆட்சியில் தான் நம்பர் 1 மாநிலமாக சிரந்து விளங்கியது. மத்திய அரசு எப்போதும் மாநிலங்களுக்கான நலனில் பாரபட்சமாகவே நடந்து வருகிறது. விவசாயிகளை ஒரு நாளும் ஆளும் மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை.
கர்நாடகா விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து மாநில முதல்வர் சித்தராமையா பிரதமரிடம் பேச அவகாசம் கேட்ட போது பிரதமர் மறுத்துவிட்டார். காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் வீணடித்துவிட்டார்கள்” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com