நெல்லை ஜெ.பி கல்வி குழுமம் சார்பில் மாணவர்கள் பொங்கல் விழா கொண்டாட்டம்
திருநெல்வேலி தேவேந்திரா கல்வி மற்றும் அறக்கட்டளை ஜெ.பி கல்வி குழுமம் கடந்த 27 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக கல்விப்பணியில் தேவேந்திரர் பிசியோதெரபி கல்லூரி மற்றும் ஆல்மைட்டி செவிலியர் கல்லூரிகளை நடத்தி வருகின்றது
முந்தைய ஆண்டகளைப் போல் இந்த ஆண்டும் 09-01-2026 (வெள்ளி) அன்று பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவினை கல்வி குழுமத்தின் தலைவர் பெ.ஜான்பாண்டியன், முனைவர் பிரிசில்லா பாண்டியன் நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் வியங்கோபாண்டியன் வி.ஷாலினி, டாக்டர். வினோலின் நிவேதா மற்றும் டாக்டர் நவீன் ஆகியோர் பங்குபெற்று சிறப்பித்தனர். அவர்களுக்கு கல்லூரிகள் சார்பாக சிறப்பான மற்றும் பாரம்பரியமிக்க முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பலவிதமான தமிழ் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவினை கல்வி குழுமத்தின் பதிவாளர் மு. ரவிகிருஷ்ணன், கல்லூரி முதல்வர்கள் நிஸாரிதின், தமிழ்செல்வி, நிதி மேலாளர் அருள்மதி, நிர்வாக அதிகாரி கணேஷ் குமார் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.