நெல்லை மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடுவதை ஒட்டி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மாபெரும் தூய்மைப் பணி
நெல்லை மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடுவதை ஒட்டி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மாபெரும் தூய்மைப் பணிகளை பயிற்சி துணை ஆட்சியர் கேரோப்புக் லிதியா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு சமூக நீதிக் கொண்டாட்டமாக பொங்கல் பண்டிகையை முன்னெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை கொண்டாடுவதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சிப்காட் வளாகத்தில் 14ந்தேதி அன்று சமத்துவ பொங்கல் கொண்டாடுவதையொட்டி மாபெரும் தூய்மைப் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை பயிற்சி துணை ஆட்சியர் கேரேனாப்புக் லிதியா கொயடிசைத்து தொடங்கி வைத்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டார், மேலும், இத்தூய்மைப் பணிகள் இன்று முதல் வரும் 13.01.2026 வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், சிப்காட் தலைமை அலுவலக பொது மேலாளர் ரஞ்சித்குமார், கங்கைகொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பிரபாகர், திட்ட அலுவலர் கார்த்திகேயன், சிப்காட் அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.