மேலப்பாளையம் சந்தை: விலையில் வெள்ளாடுகளை மிஞ்சிய செம்மறி

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கலுங்கு மறுநாள் கரிநாள் அன்று பொங்கல் சோற்றுடன் ஆட்டுக்கறி சமைத்து உண்பது வழக்கமாக உள்ளது. அதன்படி . நெல்லை மாவட்டத்தில் கரிநாளான மாட்டு பொங்கல் தினத்தன்று சமைப்பதற்காக இன்று மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் காலை முதலே அதிக அளவில் திரண்டதால் சந்தை களைக்கட்டியது.ஆடுகளை வாங்குவதற்காக பொதுமக்களும், கறிக்கடைக்காரர்களும் குவிந்தனர். செம்மறி ஆடு, வெள்ளாடுகள் என பல வகை இன ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தாலும், வெள்ளாடுகளுக்கு அதிக கிராக்கி இருந்தது. 

ஆட்டின் உயரம், கறியின் அளவு, எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது. கறியின் எடை அதிகரிக்க, அதிகரிக்க விலையும் உயர்ந்து காணப்பட்டது. கறியை பொறுத்து ஒரு வெள்ளாடு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.27 ஆயிரம் வரை விலை போனது.  அதேநேரம் செம்மறி ஆடுகள் ரூ.35 ஆயிரம் வரை விலை போனது. பொங்கல் பண்டிகையை ஒட்டி மற்ற வாரங்களை விட இந்த வாரம் விற்பனை அதிகம் காணப்பட்டது. 

கடந்தாண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு பொங்கலை முன்னிட்டு அதிக ஆடுகள் விற்பனையாகி இருக்கிறது எனவும், எப்படியும் இன்று ஒரே நாளில் ரூ.6 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் நடந்து இருக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். ரெட்டியார்பட்டி இணைப்பு சாலை முழுவதும் ஆடுகளை ஏற்றி வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. சந்தைக்குள் மட்டுமல்லாது சந்தைக்கு வெளியிலும் அதிக அளவு ஆடுகள், கோழிகள் விற்பனை நடந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

 

More News >>