ஹெ1பி விசாவுக்கு விண்ணப்பமே இல்லை!- அமெரிக்கா அறிக்கை
ஹெச்1பி விசாவுக்காக புதிதாக வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது என அமெரிக்க குடியேற்றக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹெச்1பி விசா மூலம் ஐடி ஊழியர்களே அதிகளவில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பின்னர் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சூழல் இறுக்கமாகியுள்ளது.
அதாவது அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கான ஹெச்4 விசா நடைமுறைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அமெரிக்காவில் பணியாற்றுவோரின் துணைகளுக்கு வழங்கப்படும் விசா தரப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமா அதிபராக இருந்தபோது ஹெச்1பி விசா நடைமுறைகளுக்காக கொண்டுவரப்பட்ட அனைத்து நடைமுறைகளும் தற்போது மறுபரிசீலனை செய்யப்படவுள்ளது. இதனால் ஹெச்1பி விசா மூலம் அதிகம் பயனடையும் இந்தியர்களுக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கவாழ் வெளிநாட்டவர்களின் தரப்பிலிருந்து பலகட்ட எதிர்ப்புகள் எழுந்து வந்தன. ஆனால், சமீப சில நாள்களாக ஹெச்1பி விசாவுக்கு மாற்று வழி விசாக்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தே காணப்படுகிறது.
இந்த சூழலில் ஹெச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் சரமாரியாகக் குறைந்துள்ளது. புதிதாக யாரும் விண்ணப்பிக்வில்லை என்றும் இதில் இந்தியர்களின் விண்ணப்பங்கள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன என அமெரிக்க குடியேற்றக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com