வடலிவிளையில் பொங்கல் விழா: வெற்றி பெற்றவர்களுக்கு திமுக நிர்வாகி கிரஹாம்பெல் பரிசு வழங்கினார்
வடலிவிளையில் பொங்கல் விழா: வெற்றி பெற்றவர்களுக்கு திமுக நிர்வாகி கிரஹாம்பெல் பரிசு வழங்கினார்
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெல்லை திமுக கிழக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் போட்டியினை தொடங்கி வைத்தார். கணவன் மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் போட்டியில் முதல் பரிசை மாறன்குளத்தைச் சேர்ந்த அஜித் ஜோதிகா தம்பதிர் முதல் பரிசை வென்றனர். இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள் திருநங்கைகள் ஆர்வமாக பங்கேற்று கல்லை தூக்கி விளையாடினர். இளைஞர் ஒருவர் 31 முறை கல்லை தூக்கி போட்டு ரூபாய் 3000 பரிசை வென்றார்.
அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியும் நடைபெற்றது. இதில், திசையன்விளை அடுத்த நந்தன் குளத்தைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கு முதல் பரிசாக பிரிட்ஜ் கிடைத்தது. மேலும் இவர் வாய் பேச முடியாத இரண்டு காதும் கேளாத பெண்மணி ஆவார். அதிர்ஷ்ட குலுக்கலில் முதல் பரிசாக பிரிட்ஜ் கிடைத்ததை அறிந்து ஆனந்த கண்ணீர் விட்டார் இது அப்பகுதி மக்களிடையே நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.
வடலிவிளையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டியை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார்.