அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் பிறந்த நாள்: பொதுசெயலாளர் செந்தில் வாழ்த்து

அகில இந்திய ரியல் எஸ்டேட் அமைப்பின் நிறுவனர் ஏ. ஹென்றி பிறந்த நாள் விழா, ரியல் எஸ்டேட் எழுச்சி தினம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை மதுரவயலில் உள்ள எஸ்.பி.பி கார்டனில் நாளை (பிப்- 12) பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் 142 புதிய பொறுப்பாளர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். விழாவில் புதிய உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

நிகழ்ச்சி மாலை 4.30 மணியளவில் தொடங்குகிறது. அகில இந்திய ரியல் எஸ்டேட் அமைப்பின் நிறுவனர் ஹென்றியின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த அமைப்பின் பொதுச் செயலாளரும் கோவை தேஜாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான லயன். செந்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு ரியல் எஸ்டேட் அதிபர்கள் பங்கு கொள்கின்றனர்.

More News >>