தோத்தாலும் ஜெயித்தாலும் மீசைய முறுக்கு.!- அசால்ட் காட்டிய கோலி
வீழ்ந்தாலும், ஜெயித்த அணியை பாராட்டிய கோலிக்கு பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அதிரடியும் மூர்க்கத்தனமான ஆட்டமும் கொண்டவன் என்ற ஆரம்ப கால விமர்சனங்களை எல்லாம் ஊதித் தள்ளிவிட்டு தனது அதிரடி ஆட்டம் மூலம் ‘ரன் மெஷின்’ ஆக உருவெடுத்தார்.
ஐபிஎல் தொடரில் பெங்களுரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகத் தற்போது கலக்கி வருகிறார் கோலி. நேற்று ஹைதராபாத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி மற்றும் பெங்களுரூ ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது கோலியின் ராயல் சாலஞ்சர்ஸ் அணி. ஆனால், சற்றும் தளராமல், ஹைதராபாத் அணியை புகழ்ந்து தள்ளினார் கோலி. அவர் கூறுகையில், “ஐபிஎல் 2018-ல் சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்ட அணி என்றால் அது ஹைதராபாத் அணிதான்.
சற்றும் தளராத வீரர்கள் இருந்தால் போதும் எத்தனை தோல்விகள் வந்தாலும் தாண்டிவிடலாம். அத்தகைய வீரர்கள் கொண்டது ஹைதராபாத் அணி” என்று கெத்தாகப் பாராட்டினார்.
’இதுதாண்டா கேப்டன் கோலி..!’ என சமூக வலைதளங்களில் கோலிக்கான ஆதரவு பெருகியுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com