கோவை: அலுவலகத்தில் அடைத்து வைத்து பெண் காவலரை சூறையாடிய உயரதிகாரி!
கோவையில் 45 வயது பெண் காவலரை அலுவலக அறையில் அடைத்து வைத்து உயரதிகாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமென்டன்ட் செந்தில்குமார் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் வெளியே சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் காவலர் உயரதிகாரிகளிடம் கொடுத்த புகாரையடுத்து , செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட, பெண் அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.