கோவை திமுக மாநகர் மாவட்டம் சார்பில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி

மத்திய  அரசைக்கண்டித்து கோவை மாநகர் மாவட்டம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில்  ஏராளமான இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போரால், கேஸ் தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்  தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. 

கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரத்தினபுரி பகுதியில், பகுதி கழக செயலாளர் கோவை லோகு முன்னிலையில்  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் பங்கேற்று, மத்திய அரசுக்கு கண்டனத்தை  தெரிவித்தார். கேஸ் சிலிண்டருக்கு மாலைபோட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தொடர்ந்து, மத்திய அரசுக்கு  எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது

More News >>