பாஜகவினர் என்னை எந்த நேரத்திலும் கொலை செய்வார்கள் - பிரகாஷ் ராஜ்
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்ச்சித்து வருகிறார். இவரது நண்பரான கௌரி லங்கேஷ் மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதிலிருந்து பாஜகவை நேரடியாக எதிர்த்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் செய்தியாளகளிடம் கூறுகையில், நான் பாஜக மற்றும் இந்து அமைப்பினருக்கு எதிராக பேசி வருவதால், என்னை கொலை செய்ய சதி நடக்கிறது. இந்து அமைப்புகள் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறார்கள். எந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம்.
இதற்கு நான் அஞ்ச போவது இல்லை. என்னிடம் இருந்து உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய அறிவு, நடிப்பு திறமையை யாராலும் பறிக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டை ஆள தெரியவில்லை.
நல்லாட்சி நடத்துவதாக கூறிய நரேந்திர மோடி, நாட்டில் குழப்பங்களை உண்டாக்கி உள்ளார். இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மதவாத கட்சிகளுக்கும், வன்முறையை தூண்டும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல், மக்களாட்சி நடத்தும் கட்சிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும்” என கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com