அடுத்த தேர்தலில் அண்ணாமலை கட்சி போட்டி - தமிழக அரசியலில் பரபரப்பு

பாஜகவில் இருந்து விலகுவது தொடர்பாக கட்சி தலைமைக்கு அண்ணாமலை வழங்கிய ராஜினாமா கடிதம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் , இன்ஸ்டா பக்கத்தில் அண்ணாமலை தோன்றி பேசியதாவது, '' பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு,ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன். தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளும் மொழியில் பேசவில்லை. அந்த நிலையை மாற்ற நான் முயற்சி செய்தேன். அதேசமயம், கட்சிக்குள்ளும் வெளியிலும் இருந்த பல்வேறு தடைகள், எதிர்ப்புகள் மற்றும் சவால்களை மீறியும் வெற்றியைப் பெற்றிருக்கிறேன்.

கடந்த 18 மாதங்களில் கட்சியின் உயர்மட்ட தலைமையுடன் பலமுறை நான் விவாதங்களும் கருத்து வேறுபாடுகளும் கொண்டிருந்தேன். தமிழ்நாட்டை அணுகும் முறையில் எங்களது கருத்துக்கள் ஒன்றிணைவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.நீண்ட சிந்தனைக்குப் பிறகு, நான் கட்சியிலிருந்து விலகி, அரசியலுக்குள் நுழைந்ததன் உண்மையான நோக்கத்தை மீண்டும் சிந்தித்து, எதிர்காலம் என்னை எங்கு அழைத்துச் செல்கிறதோ அந்தப் பாதையில் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது .பிஜேபியில் சேருவதற்கு முன், ரஜினிகாந்த் என்னை கூப்பிட்டார். அதற்கு முன்னர், பாஜவில் சேர வாக்குறுதி கொடுத்திருந்தேன். அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றும்விதத்தில் , அந்த கட்சியில் சேர்ந்தேன்.

கொஞ்சம் பொறுமை... கொஞ்சம் நிதானம் இப்போது நமக்கு தேவை. இப்போது, ஒவ்வொரு செங்கலை வைக்கும் போது, நிதானம் தேவை. அந்த செங்கல் நல்ல கட்டடமாக உருவாக நாம் காத்திருக்க வேண்டும். ஜிம்முக்கு சென்றால், கூட கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மஸ்ஸில்சை உருவாக்க முடியும் . எடுத்தவுடனே 50 கிலோ தூக்கி விட முடியாது. நாம் மாறுவோம்... மாற்றம் தானாகவே நடக்கும். யார் மீதும் வன்மம் கிடையாது. சண்டை போடுவது நமது வேலை அல்ல. மாற்றத்தை கொடுப்பதுதான் நமது வேலை. யாரையும் திட்டி தீர்க்க வேண்டாம். சமூகலைத்தளத்தில் ரெஸ்பான்சுடன் பதில் கொடுக்க வேண்டும். நான் தவறு செய்திருந்தால், கூட மன்னியுங்கள். என்னை சேர்ந்தவர்கள் தவறு செய்தால் மன்னியுங்கள். புதிய தலைமுறையை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டும். இதற்காகவே, நான் இன்ஸ்டாவில் வந்து பேசுகிறேன்.

வயதானவர்கள், ஜென்சி என இரு தரப்பினரும் இருக்கிறார்கள்.ஜென்சியின் வேகத்துக்கு தீனி போட வேண்டும். முதியவர்கள் வசதியாக நல்லமுறையில் வாழ வழிவகை செய்ய வேண்டும். மூன்று மொழி கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்தது உண்மைதான். எப்படி, திமுக அதிமுக, டிவிகே, சீமான், அன்புமணி, வைகோ, பிரேமலதா ஆகியோரை பார்க்கிறோமோ... அப்படிதான் பாஜகவை பார்க்கிறேன். பிரதமர் மோடியை நேரடியாக பார்த்தேன். அமித்ஷாவிடம் அவரது கண்ணைப்பார்த்து சொல்லி விட்டுதான் கட்சியை விட்டு வெளியே வந்தேன். நாகரீமான அரசியலை முன்னெடுப்போம். சமூகலைத்தளத்தில் ஆபாசம் வேண்டாம். 42 வயதாகிறது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக சுற்றி விட்டு , உங்கள் முன் நிற்கிறேன். தமிழகத்தை முதன்மையான மாநிலமாக கொண்டு வருவதுதான் எனது நோக்கம். அடுத்த தேர்தலில் அரசியல் கட்சியாக போட்டியிடுவோம். ''

இவ்வாறு அவர் கூறினார்.

More News >>