தண்ணீரை எரிபொருளாக கொண்டு கார் ஓடுவது எப்படி? கோவையில் ஜப்பான் நிறுவனம் புது முயற்சி

இந்தியா–ஜப்பான் கூட்டு முயற்சியில் கோவையில் ஜப்பான் தொழில்நுட்பத்தில் கிரீன் ஹைட்ரஜன் வாகனங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

கோவை அவினாசி சாலையிலுள்ள  ரெசிடென்சி  ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், K-KCCS இந்தியா நிறுவனத் தலைவர் கருணாநிதி காசிநாதன் மற்றும் ஜப்பானின் H2 Innovation நிறுவன மேலாண்மை இயக்குநர் யோசுகே மோரி ஆகியோர் கூறியதாவது, 

ஜப்பானில் தண்ணீரில் ஓடும் வாகனங்கள், பேருந்துகள் உள்ளன. அதே தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, கோவை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பபந்தத்தை மேற்கொண்டு வருகிறோம். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், ஹைட்ரஜன் வாகனங்களுக்கான முக்கிய உதிரிபாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.டோக்கியோவில் சுமார் 100 ஹைட்ரஜன் பேருந்துகள் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றன. டொயோட்டா நிறுவனத்தின் மிராய் ரக கார் ஹைட்ரஜனில் ஓடுவதுன்.  ஹைட்ரஜன் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஃபியூயல் செல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகிறோம். 

கோவையில் பொறியாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகளவில் உள்ளதால், கிரீன் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழல் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் உமிழ்வை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க எதிர்காலத்தில்  கிரீன் ஹைட்ரஜன் முக்கிய பங்கு வகிக்கும் .அரசு மானியங்கள் மற்றும் ஆராய்ச்சி நிதியை பயன்படுத்தி கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இது தொடர்பான ஆராய்ச்சியை  ஊக்குவிக்க முடியும். 

கோவையில் கிரீன் ஹைட்ரஜன் தொழில்நுட்பம் மற்றும் அதற்கான உதிரிபாகங்களை தயாரிப்பது தொடர்பாக தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைக நடந்து வருகிறது '' என்றனர். 

More News >>