குட்டி இதயங்களை காக்க மாரத்தன் பந்தயம்... கோவை ஜி.கே.எம்.என் மருத்துமனை நடத்துகிறது!

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக,இதயக் குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற மாரத்தன் ஒட்டப்பந்தயம் வரும் செப்டம்பர் 27 ம் தேதி நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் குழந்தைகள் புற்றுநோய் மற்றும் குழந்தைகளின் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக,தொடர்ந்து நான்காவது பதிப்பாக நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான பதக்கம் மற்றும் டீ சர்ட் வெளியீட்டு விழா மருத்துவமனை வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது.

உலக இதய தினத்தை முன்னிட்டு நடைபெறும் 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற பெயரிலான மாரத்தன் போட்டிக்கான பதக்கம் மற்றும் டீ சர்ட் ஆகியவற்றை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். ரகுபதி வேலுசாமி அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர்,''மூன்று வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற உள்ள இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் பங்கேற்கின்றனர்.

இந்த போட்டிக்கு எல்.எம்.டபிள்யூ,லஷ்மி மில்ஸ் நிறுவனம்,லஷ்மி கார்டு குளோத்திங்,ப்ளூ டாலியா,பிரீமியர் ஃபைன் லினன்ஸ்,லட்சுமி எனர்ஜி மற்றும் என்விரான்மென்ட், பிரிகாட்,சோடெக்ஸோ ஆகிய நிறுவனங்கள் ஸ்பான்ஷர் செய்துள்ளன.புற்றுநோய் மற்றும் இதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் இந்த மரத்தானில் கலந்து கொள்கின்றனர்'' என்றார்.

நிகழ்ச்சியில், குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள்,, குழந்தைகள் இதய மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் பலர் பங்கேற்றனர். இந்த மாரத்தன் போட்டியின் மூலம் கிடைக்கவுள்ள நிதி, குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>