லண்டன் வழக்கில் விஜய் மல்லையா தோல்வி- 10ஆயிரம் கோடியை இழந்தார்!

லண்டன் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் விஜய் மல்லையாவுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் மல்லையா மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்தார்.

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் முதல் லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் இந்திய அரசு, அவரை நாடு கடத்த முயன்றுவருகிறது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை, தலைமை மாஜிஸ்திரேட்டு  ஆண்ட்ரியூ ஹென்ஷா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதுநாள் வரையில் இந்திய சிபிஐ அதிகாரிகள் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தனர்.

இன்று நடந்த விசாரணையில் இந்திய வங்கிகளிடம் விஜய் மல்லையா பெரும் தோல்வியைச் சந்தித்தார். இதனால் மல்லையாவுக்கு 10ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் லண்டன் நீதிமன்றம் சர்வதேச அளவில் மல்லையாவுக்கு இருக்கும் வங்கிக்கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>