நிச்சயதார்த்த விழா- பெற்றோருடன் இஷா அம்பானி அசத்தல் நடனம்!
அம்பானியின் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான இஷா அம்பானியில் நிச்சயதார்த்த விழா நேற்று இரவு கோலாகலமாக நடந்தேறியது.
நாட்டின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இந்தியாவையே ஒரே குடும்பம் கைக்குள் வைத்திருக்கிறது என்றால் அது அம்பானியின் குடும்பமாகத்தான் இருக்கும். இவர்கள் தொழில் வளர்ச்சிக்காக நாட்டின் பிரதமரே விளம்பரப்படம் நடித்துக்கொடுப்பார். அவ்வளவு பிரசித்தி பெற்ற குடும்பத்தில் இப்போது கல்யாண மேளம் கொட்டப்போகிறது.
முகேஷ் அம்பானி - நிடா அம்பானி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். இவர்களில் இரட்டைக் குழந்தைகளான ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானிக்கு அவரவர் காதலர்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் அம்பானி குடும்பத்தில் இரண்டு திருமணங்கள் நடைபெற உள்ளன.
சில நாள்களுக்கு முன்னர் மகன் ஆகாஷின் நிச்சயதார்த்தத்தை முடித்த அம்பானி குடும்பத்தார், நேற்று இரவு மகள் இஷா அம்பானியின் நிச்சயதார்த்த விழாவையும் மும்பையில் ஆட்டம் பாட்டத்துடன் கோலகலாமக் நடத்தினர். தன் பெற்றோருடன் இஷா ஆடிய நடனம் தான் இன்றைய தேசிய வைரல் ஹிட் லிஸ்டில் முதலிடம் பெற்றுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com