காலியான ஷ்ரேயாஸ்hellipகோலி இடத்தைக் கைப்பற்றிய கருண் நாயர்!
ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகியுள்ள கேப்டன் கோலிக்கு பதில் ஷ்ரேயாஸ் வருவார் என்ற நிலையில் கருண் நாயரை நியமித்துள்ளது பிசிசிஐ.
இந்திய அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். பெங்களுரூ ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகப் பட்டையைக் கிளப்பி வரும் கோலி, விரைவில் இங்கிலாந்து கிரிக்கெட் லீக் தொடர் ஒன்றிலும் விளையாட உள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் எவ்வளவு பிரபலமோ அதுபோல், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடர் வெகு பிரபலம். அந்தக் கிரிக்கெட் தொடரில் கவுண்டி சர்ரே அணிக்காக ஜூன் மாதம் முழுவதும் விளையாடுவதற்காக விராட் கோலி ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜூன் மாதம் முழுவதுமாக கவுண்டி தொடரில் விளையாடும் விராட் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா பங்குபெறும் டெஸ்ட் தொடரில் பாதியில் கோலி இணைந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேப்டன் கோலி வரும் வரையில், கோலிக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது கோலிக்கு பதில் கருண் நாயர் விளையாடுவார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடரில், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஷிகார் தவான், முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, கருண் நாயர், சஹா, அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, பாண்டியா, இஷாந்த், ஷர்துல் தகுர் ஆகியோர் கொண்ட அணி பங்குபெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com