மாலை நேர ஸ்னாக்ஸ் வேர்க்கடலை பக்கோடா ரெசிபி

மாலை நேரம் ரொம்ப போர் அடிக்குது.. ஏதாவது கொரிக்கணும் போல இருக்கா. உங்களுக்காகவே இதோ வேர்க்கடை பாக்கோட ரெசிபி. எளிதாக செய்யக்கூடிய பக்கோடா எப்படி செய்றதுன்னு பார்ப்போம்

தேவையான பொருட்கள்:

பச்சை வேர்க்கடலை - ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது (விருப்பப் பட்டால்) - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் தண்ணீர் தெளித்து பிசிறவும். பிறகு, காய்ந்த எண் ணெயில் உதிர்த்துப் போட்டு பொரிக் கவும்.

பின்னர், சிறிதளவு கறிவேப் பிலையை பொரித்து எடுத்து கலக்கவும். மொறுமொறுப்பான வேர்க்கடலை பக்கோடா ரெசிபி தயார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>