லாலு பிரசாத் யாதவிற்கு மே 14 ஆம் தேதி வரை பரோல் வழங்கியது!nbsp
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பான 3 வழங்குகளில் 5 ஆண்டு சிறை தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறைதண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில்,அவருக்கு சக்கரை வியாதி, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு இருப்பதால், ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு இருந்த லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமானதை அடுத்து, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்கானிப்பில் உள்ளார்.
இந்நிலையில், அவரது இளைய மகனும் சட்டமன்ற உறுப்பினருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு மே 12ஆம் தேதி பாட்னாவில் திருமணம் நடக்க உள்ளது. இதற்காக 5 நாட்கள் பரோல் கோரி சிறைத்துறையிடம் அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பத்தை பரிசீலித்து நாளையில் இருந்து மே14 ஆம் தேதி வரை பரோல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com