பூமியின்மேல் கிரகங்களின் பலன் என்ன ?
மனிதர்களுக்கு செவ்வாய் தோஷம் உண்டு என்பர். பூமிக்கு வெள்ளியும் வியாழனும் தோஷமாக அமைந்துள்ளதாம். அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி ரட்கர் பல்கலைக்கழகத்தின் பூமி மற்றும் கோள்களுக்கான அறிவியல் துறையை சேர்ந்த டென்னிஸ் வி. கென்ட் சில ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
"எட்டு லட்சம் ஆண்டுக்கு முன் நீங்கள் கையில் திசைகாட்டும் கருவியை வைத்துக்கொண்டு வடக்கு திசை நோக்கி நின்று கொண்டிருந்தீர்களானால், உங்கள் கையிலுள்ள காந்த முள் வடக்குக்கு பதிலாக தெற்கு திசை நோக்கி நின்று கொண்டிருந்திருக்கும்," என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கோள்களின் ஈர்ப்பு சக்திகள் பூமியின் சுற்றுப்பாதையின்மேல் தாக்கத்தை செலுத்துகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு 4 லட்சத்து ஐந்தாயிரம் ஆண்டுக்கு ஒருமுறை இப்படியான மாற்றம் கடந்த 21 கோடியே 50 லட்சம் ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று ரட்கர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள பெட்ரிஃபைடு வன தேசிய பூங்காவிலுள்ள 1,700 அடி உயரமுள்ள பாறை மற்றும் நியூயார்க், நியூஜெர்ஸியில் பல்வேறு விதமான ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.
பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாறுதல் அதன் காந்தப்புலத்திலும் மாறுதலை கொண்டு வருகிறது. காந்தப் புலம் மாறுவதன் காரணமாக பருவ காலங்களிலும் மாற்றம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com