செல்போன் எண் தர மறுத்ததால் கொடூரம்: சிறுமி தீ வைத்து எரிப்பு
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் செல்போன் எண் தர மறுத்த சிறுமியை வாலிபர் ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், அசாம்கார் மாவட்டத்தில் உள்ள ஃபரிகா என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகமது ஷாய். இவரது பக்கத்து வீட்டில் தலித் சிறுமியும் வசித்து வந்தார். இந்நிலையில், முகமது ஷாய் அடிக்கடி சிறுமியிடம் செல்போன் எண்ணை கேட்டு சிறுமியை வற்புறுத்தி வந்துள்ளான்.
இதேபோல், சிறுமியின் வீட்டிற்கு சென்ற ஷாய் மீண்டும் செல்போன் எண்ணை கேட்டுள்ளான். ஆனால், சிறுமி கண்டிப்பாக மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஷாய், சிறுமியை அடித்து தாக்கிவிட்டு மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துள்ளான்.
இதில், மளமளவென உடல் முழுவதும் தீ பரவியதல் சிறுமி அலறி துடித்தால். சிறுமியின் சத்தம் கேட்டு விரைந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு 80 சதவீத தீக்காயத்துடன் சிறுமி ஆபாயக் கட்டத்தில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ஷாய் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் எண் தர மறுத்ததற்காக சிறுமியை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com