இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 7.4 சதவீதமாக உயரும்: ஐஎம்எப்
நடப்பாண்டில் 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சி கொண்ட இந்தியா, அடுத்த ஆண்டில் அதிகப்படியான வளர்ச்சியைப் பெறும் என சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான அறிக்கையில், ’2016-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. ஆனால் 2017-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக வீழ்ந்தது.
இதற்குப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சேவை வரி, வங்கிகளின் வாராக்கடன் நிலைமையே காரணமாகும். நடப்பாண்டில் 7.2 சதவீத வளர்ச்சியும் அடுத்த ஆண்டில் 7.4 சதவீத வளர்ச்சி இருக்கும்.
அடுத்த ஆண்டில் வேகமான வளர்ச்சி பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 3.6 % இருந்த நுகர்வோர் பொருள்கள் மீதான விலை, அடுத்த ஆண்டுகளில் 5% இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com