ஆஃபர் மழை எச்சரிக்கை- ஃப்ளிப்கார்ட்டுக்குப் போட்டியாக அமேசான்!
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ‘பிக் டே சேல்’ அதிரடி சலுகைத் திருவிழாவைத் தொடர்ந்து அமேசானும் போட்டிக்கு சலுகைகளை அள்ளி வீசத்தயாராகி உள்ளது.
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ‘பிக் டே சேல்’ ஆஃபர் வருகிற மே 13-ம் தேதி தொடங்கி மே 16-ம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பு வெளியானதுதான் தாமதம், ஆன்லைன் ஷாப்பிங் செல்வோருக்கு ஆர்வம் தாங்கவில்லை.
ஒரு ரூபாய் ஹேர்பின் முதல் 1 லட்சம் ரூபாய் ஸ்மார்ட்போன்கள் வரையில் அதிரடி ஆஃபர் மழையில் வாடிக்கையாளர்களைத் தாக்கத் தயாராகி உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்புகள் போன்ற கேட்ஜட்ஸ் பொருள்களுக்குத்தான் ஆஃபர்கள் அதிரடி விலைக்குறைப்பு உள்ளது.
இதேபோல், அமேசானின் லட்சக்கணக்கான மாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு 35 சதவிகிதம் முதல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 4லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளும் காத்திக்கொண்டிருப்பதாக அமேசான் அறிவித்துள்ளது.
அமேசானின் இந்த ‘சம்மர் சேல்’ ஆஃபர் நள்ளிரவிலும் தொடரும் என்றும் வீட்டு உபயோகப் பொருள்களுக்கு வழக்கம்போல் சலுகைகளின் அடிப்படையிலேயே ஈ.எம்.ஐ, லோன் வசதிகளும் செய்து தரப்பட உள்ளது கூடுதல் விசேஷமாகும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com