டி20 போட்டியில் ரஹானேவுக்கு இடம் இல்லையா..?- ஷாக்கான கங்குலி!
’டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரஹானே, டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணியிலேயே இடம்பெறாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது’ என கங்குலி கூறியுள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் எவ்வளவு பிரபலமோ அதுபோல், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடர் வெகு பிரபலம். அந்தக் கிரிக்கெட் தொடரில் கவுண்டி சர்ரே அணிக்காக ஜூன் மாதம் முழுவதும் விளையாடுவதற்காக விராட் கோலி ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜூன் மாதம் முழுவதுமாக கவுண்டி தொடரில் விளையாடும் விராட் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா பங்குபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கமாட்டார் என்றும் அடுத்தத் தொடர்களில் இணைந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேப்டன் கோலி வரும் வரையில், கோலிக்கு பதிலாக கருண் நாயர் களமிறங்க உள்ளார். மேலும் இந்த டெஸ்ட் தொடரில் கேப்டனாக அணியை அஜிங்க்யா ரஹானே வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ’டெஸ்ட் போட்டியில் கேப்டனாக வழிநடத்து உள்ள ரஹானே, அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களில் விளையாடக் கூட வாய்ப்பு அளிக்கவில்லை. நானாக இருந்திருந்தால் அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக ரஹானேவையே தேர்வு செய்திருப்பேன்” என்று வருத்தப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com