அடுத்தக்கட்டத்தில் ஐபிஎல்hellip புது கெட்டப்போடு `சின்ன தல ரெய்னா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் `சின்ன தல’ ரெய்னா, தனது புதிய கெட்டப்பை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல்-ன் 11-வது சீசன் வெகு விமர்சையாக கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வழக்கம் போல தூள் கிளப்பி வருகிறது.

இதுவரை அனைத்து அணிகளும் 10 போட்டிகளை விளையாடி முடித்தள்ள நிலையில், சென்னை அணி 7 வெற்றிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வீரர் என்றில்லாமல், சென்னை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தங்கள் பங்கை கொடுத்து வருவதால், இந்த முறை கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு தென்படுகிறது.

இந்நிலையில், சென்னை அணியின் `சின்ன தல’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, புதிய கெட்டப்புடன் அடுத்தப் போட்டியிலிருந்து களம் இறங்க உள்ளார். தனது புதிய சேன்ஜ்-ஓவரை ட்விட்டரில் ஒரு வீடியோவுடன் வெளியிட்டுள்ளார் ரெய்னா.

அந்த வீடியோ பதிவுடன், `இந்த ஐபிஎல் சீசன் இக்கட்டான கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, நாமும் அடுத்தக் கட்டத்துக்குப் போக வேண்டும். எங்கள் ரசிகர்கள் அனைவருக்கும் அளவுகடந்த அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவை’ என்று உற்சாகமாகப் பதிவிட்டுள்ளார் நம்ம சின்ன தல ரெய்னா.

 

 

More News >>