காலா அரசியல் படம் இல்லை, படத்தில் அரசியல் இருக்கு! ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நந்தனம் ஒய்எம்சி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்,தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொன்வண்ணன், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், அனிருத், எஸ்.தாணு, டி.சிவா, தேனப்பன், நடிகைகள் மீனா, கஸ்தூரி, ரஜினிகாந்த் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய ரஜினிகாந்த் இது இசை வெளியீட்டு விழா போல தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா போல இருக்கிறது. நான் கடைசியாக கொண்டாடிய வெற்றி விழா சிவாஜி. அதன் பின்னர் எந்திரன் படம் வெளியாகிய போது உடல் நலம் மோசமானதால் படத்தின் வெற்றியை கொண்டாடவில்லை. பின்னர் ராணா படம் சரியாக ஒடவில்லை அப்போது ஒன்றை தெரிந்துகொண்டேன். ரஜினி அவ்வுளோ தான் முடிஞ்சு போச்சுனு சொன்னாங்க 40 வருஷமாக சொல்றாங்க, அவர்களையும் நான் தப்பு சொல்ல முடியாது. நானாக ஓடவில்லை, ஆண்டனன் ஓட வைத்துள்ளான்.
வாழ்க்கையில் நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்ப நல்லவனாக இருந்தால் கோழைன்னு நினைத்து விடுவார்கள். புத்திசாலிகளுடன் பழகலாம், ஆனால், அதிபுத்திசாலிகளிடம் ஆலோசனை மட்டும் கேட்க கூடாது. அவர்களிருக்கும் இடத்தில் பல ஜன்னல், கதவு இருக்கும் நேரம் வந்தால் ஓடி விடுவார்கள்.
நான் அடிக்கடி இமயமலைக்கு போவதற்க்கு காரணம். அங்கே உள்ள கங்கை நதியை பார்க்கத்தான். தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் எனது கனவு. நான் கண் மூடுவதற்கு முன்னால் இது நடக்க வேண்டும் என்றார்.
பின்னர், நான் காலத்திற்கு ஏற்ப மாற நினைத்தேன். அப்போது சவுந்தர்யா மூலம் ரஞ்சித்தின் அறிமுகம் கிடைத்தது. அவர் டான் கதையை சொன்னார். பாட்ஷா தான். மலேசியா அன்டர்வேர்டு டான் என்று அவர் கதை சொன்னதால் கதையை கேட்க ஆரம்பித்தேன். அவரிடம் பேசும்போதே, அவரது குணாதிசயமே பிடித்தது. பிறகு கதையை கேட்டேன். ரஞ்சித் சந்தர்ப்பவாதி இல்லை என தெரிந்தது அவர்மேல் நம்பிக்கை வந்தது. பின்னர் மறுபடியும் ரஞ்சித்தை அழைத்தேன். இருவரும் இணைந்தோம். காலா அருமையான படம் உருவானது. காலா அரசியல் படம் கிடையாது. ஆனால் படத்தில் அரசியல் இருக்கும் என்று கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com