உஷ்..சாக்zwnjஷியிடம் சொல்லாதீர்கள்!- தன் பப்பி லவ் கதை சொன்ன தோனி!
”பள்ளிப் பருவத்தில் என்னை ஈர்த்தவள் ‘அவள்’!” என தன் பள்ளிக் கால காதல் குறித்து மனம் திறந்துள்ளார் நம்ம ‘தல’ தோனி.
இந்தியாவின் நட்சத்திர வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் இந்நாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தனது சொந்த வாழ்க்கை குறித்து அதிகம் பேசாதவர்.
தன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வந்தபோதும், தனது பெர்சனல் பக்கங்களை பொது வெளியில் மிக வெளிப்படையாக பேச மாட்டார். ஆனால், தற்போது தன் பள்ளிக்கால காதல் குறித்து முதல் முறையாகப் பொதுவெளியில் பேசியுள்ளார் தோனி.
சிஎஸ்கே விளம்பர நிகழ்வு ஒன்று ராஞ்சியில் நடந்தது. அங்கு, தோனியின் முதல் ‘க்ரஷ்’ குறித்து கேட்ட போது, “அவள் பெயரில் 'a' என்ற எழுத்து இருக்கும்” எனக் கூறி நழுவ பார்த்தார். அதான் எல்லாப் பெண்களின் பெயரிலும் 'a' இருக்குமே? என்ற கேள்வி எழுந்தது.
அதன் பின்னர் “அவள் பெயரின் மூன்றாம் எழுத்து அது” என்று மீண்டும் தப்பித்தார். தொடர் கேள்விகளுக்குப் பின்னர் பதிலளித்த தோனி, “என் மனைவி சாக்ஷியிடம் யாரும் சொல்லிவிட வேண்டாம். அவள் பெயர் சுவாதி. நான் ராஞ்சியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது என் வகுப்பில் அவளும் படித்தாள். அதன் பிறகு அவளைப் பார்த்தது இல்லை” எனக் கூறி மீண்டும் தன் மனைவியிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள் என நிறைவு செய்தார்.
சிஎஸ்கே வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சர்வதேச வைரல் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com