நான் விலகுகிறேன்- கண்ணீர் மல்க விடைபெற்ற ஃப்ளிப்கார்ட் நிறுவனர்!

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கைமாறியதை அடுத்து அதன் நிறுவனர் கண்ணீர் மல்க தன் ஊழியர்களிடமிருந்தும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகினார்.

அமெரிக்காவின் மிகப்பெரும் சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் தற்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் 51 சதவிகித பங்குகளை வால்மார்ட் வாங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

சர்வதேச அளவில் அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன் போட்டியிட்டு ஜெயிப்பதற்காகவே வால்மார்ட் இத்தகைய வணிக திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், ஒரு சந்திப்பின் போது வால்மார்ட் அதிகாரி உளறியதால், அதுவே அறிவிப்பாய் போனது.

மே முதல் வாரத்தில் வால்மார்ட் நிறுவனம் தற்போதைய சந்தை நிலவரப்படி 1800 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குதாரர்களுள் ஒருவரான சாஃப்ட்பேங்க் நிறுவனத்திடமிருது அதிகாரப்பூர்வமாக வாங்கியது. மொத்தம் 77சதவிகித பங்குகள் விற்பனை ஆகியுள்ளது.

இதையடுத்து ஃப்ளிப்கார்ட் நிறுவனரான சச்சின் பன்சால், “என் கடமை முடிந்தது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஃப்ளிப்கார்ட்டுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். எங்கள் ஊழியர்கள் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். இத்தனைக்காலம் சொந்த வாழ்க்கையில் செய்யத் தவறிய பலவற்றை இனி செய்ய நேரம் கிடைத்துள்ளது” என கண்ணீர் மல்க தனது விலகலை அறிவித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>