புதிய ஆஃபர்களை தொடர்ந்து குவிக்கும் பிஎஸ்என்எல்!
இந்தியாவில் அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம் ஜியோ வருகைக்கு பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பின்னைடைவை சந்தித்துள்ளது. இந்த போட்டியை சமாளிக்க மற்ற நிறுவனங்களும் ஜியோவைப் போலவே ஆஃபர்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில், எல்லா நிறுவனங்களுக்கும் சவால் விடுக்கும் வகையில், பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பயனாயர்களுக்கு ரூபாய் 39 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது. இந்தியாவில் முண்னணியில் உள்ள 4ஜி ஜியோ பயனாயளர்களுக்கு ரூபாய் 49 கட்டணத்தில் 28 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இத்திட்டத்துக்கு எதிராக பிஎஸ்என்எல் களமிறங்கியுள்ளது.
இத்திட்டத்தை பிஎஸ்என்எல் இயக்குநர் ஆர்.கே.மிட்டல் தெரிவித்தார்.இந்த புதிய திட்டத்தை பற்றி கூறுகையில் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து ரூபாய் 39 கட்டணத்தில் 10 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் சேவை அழைப்புகளை வழங்குகின்றது. மும்பை மற்றும் டெல்லி வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 45 கட்டணத்தில் வழங்கி வருகின்றது
மேலும் பிஎஸ்என்எல் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியை 10 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சேவையும் அறிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ரூபாய் 99 கட்டணத்தில் 26 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், ரூபாய் 319 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகளை 90 நாட்களுக்கு வழங்குகின்றது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com