அறிவில்லாமல் அழகோடு உங்கள் மகள் இருக்க விரும்புகிறீர்களா...
By Isaivaani
பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் குழந்தையை சமூக வலைதளத்தில் கிண்டலடித்த பெண்ணுக்கு அவர் பக்குவமாக பதிலளித்துள்ளார்.
ஷெரின் பட்டேயன் என்ற பெண், "உங்களது மகள் ஆராத்யா எப்போதும் தாயுடன் சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம் அனுமதித்திருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும், கர்வம் பிடித்த அம்மாவின் கைப்பாவையாக உள்ள உங்கள் மகள் அறிவின்றி அழகோடு மட்டும் இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா" என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த டுவிட்டரை கவனித்த பிரபல நடிகர் அபிஷேக் பச்சன்,"மேம்... எனக்கு தெரிந்தவரை பெரும்பாலான பள்ளிகள் வாரத்தின் இறுதி நாட்களில் மூடி கிடக்கிறது. எனது மகள் எப்போதும் பள்ளிக்கு செல்கிறாள். நீங்கள் உங்கள் பதிவிலுள்ள எழுத்துப்பிழைகளை திருத்திக்கொள்ளுங்கள்" என பதிலடிகொடுத்துள்ளார்.
மகள் ஆராத்யாவை கிண்டலடித்த பெண்ணுக்கு அபிஷேக் பச்சன் பக்குவமாக அளித்த அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.