ரசிகர்களிடம் ஷாருக்கான் பகிரங்க மன்னிப்பு!
ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக நடிகர் ஷாருக்கான் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் திருவிழாவில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டனர். இதில் சொற்ப ரன்களுக்கு (102 ரன்களுக்கு) மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது.
இதையடுத்து, விளையாட்டு உணர்வு சற்று குறைந்ததால் வீரர்கள் தோல்வியைச் சந்தித்துவிட்டனர் என கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கொல்கத்தா அணி ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பதாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா அணி உரிமையை நடிகர் ஷாருக்கான், நடிகை ஜூகி சாவ்லா மாற்றும் அவரது கணவர் ஜே மேத்தா ஆகியோருடன் இணைந்து வாங்கியுள்ளார். இதனால், கொல்கத்தா அணியின் நேற்றைய மோசமான தோல்விக்குத்தான் பொறுப்பேற்பதாக ஷாருக்கான் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com