இஸ்ரேல் ராணுவம் மீது ஈரான் தாக்குதல்- நடுநிசியில் நிகழ்ந்த அபாயம்!
இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் மீது ஈரான் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஈரான் இன்று அதிகாலை 20 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் நேரடியாக இஸ்ரேலை தாக்குவது இதுவே முதல்முறை என இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரையில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த யாரும் கொல்லப்படவில்லை. தொடர்ந்து ஏவுகணை குண்டுகள், ஜெட் விமானங்களின் தாக்குதல் என அதிகாலையில் இஸ்ரேல் வானம் வானவேடிக்கைக் காட்டியது போல் இருந்தது என அப்பகுதியினர் புலம்புகின்றனர்.
ஆனால், சிரியா விவகாரத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்திருக்க வேண்டும்னென்றும் இஸ்ரேல் தான் தாக்குதலைத் துவக்கியது என்று சிரியா குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து தாக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிகாலையிலிருந்தே இஸ்ரேல் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிரியா விவகாரத்தில் குழப்பமான சூழ்நிலையே நிலவுவதால் பதட்டமான சூழல் உலக நாட்டுகள் மத்தியில் நீடித்து வருகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com