சென்னை ஐஐடியில் சோகம்: ஏரியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி பலி
சென்னை அடையாறு ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் குளித்த இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு, கானகம் பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஏரியில் குளிக்கச் சென்றனர். அப்போது, இவர்களில் மூர்த்தி, ஜெரால்டு ஆகியோர் திடீரென நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். இவர்களை காப்பாற்றும் முயற்றசியில் உடன் வந்தவர்கள் போராடினர். ஆனாலும், இருவரும் நீரிழ் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, போலீசார் தீயணைப்பு துறையினருடன் விரைந்தனர்.
இவர்களின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐஐடியின் உள்ளே நுழைய அனுமதி இல்லாதபட்சத்தில் எப்படி உள்ளே வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com