பேத்தியை செருப்பால் அடித்த 95 வயது பாட்டி!
ஏ.சி. போடுவதில் எழுந்த வாக்குவாதத்தில் ஃப்ளோரிடோவில் 95 வயது பாட்டி தன் 46 வயது பேத்தியை செருப்பால் அடித்துள்ளார்.
ஃப்ளோரிடா காவல்துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. பேசியவர் தன் பெயர் ஹேட்டி ரெனால்ட்ஸ் என்றும், தான் தன் பேத்தியை செருப்பால் அடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
டேடோனா பீச் காவல்துறையினரின் விசாரணையின்போது, பேத்தி ஜனீன் வில்லியம்ஸ் எப்போதும் படுக்கையில் படுத்திருப்பதாகவும், எவ்வளவு சொல்லியும் வெளியே வரவில்லை எனவும், நாள் முழுதும் ஏ.சியை உபயோகித்தால் தன்னால் பணம் செலுத்த இயலாது எனவும் கூறிய பாட்டி, ஆகவே பேத்தியை கோபத்தில் செருப்பால் அடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
பேத்தி காவல்துறை நடவடிக்கை தேவையில்லை என கூறிய போதும், டேடோனா காவல்துறை 95 வயது பாட்டியை கைது செய்தது. நீதிபதி பாட்டி ஹேட்டி ரெனால்ட்ஸை விடுவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com