`ஆக்கபூர்வமான சந்திப்பு!- ரஜினியின் அடுத்த அரசியல் மூவ்

ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். இது அவரின் அடுத்தக்கட்ட அரசியல் மூவ் எடுப்பதற்காக எனக் கூறப்படுகிறது.

`ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்..?’- கடந்த இரண்டு தலைமுறைகளாக ஊடகங்களுக்குத் தீனி போட்டு வரும் கேள்வி இது. இன்னும் விடை கிடைத்தபாடில்லை. முதன்முதலாக 1996-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினி.

அன்று முதல் ரஜினி ரசிகர்கள், படத்துக்குப் படம் `மக்கள் வாழ நீ ஆள வேண்டும்’ என்பது போன்று பேனர்களை வைத்து, தங்களின் தலைவனை அரசியல் களத்துக்கு விடாமல் அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு பக்கம், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு நடிகர் கமல்ஹாசன், `ட்விட்டர் அரசியல்வாதி’-யாக உருவெடுத்தார். `மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை ஆரம்பித்து, `டார்கெட் 2021’ என்ற முதல்வர் ஆகும் கனவோடு பயணிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால், இன்னும் ரஜினி கட்சி தொடங்கிய பாடில்லை.

எப்போது போர் வருமோ என்று தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த `காலா’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, `நான் நடிகன். எனக்கு நடிப்பதைத் தவிர ஒன்றும் தெரியாது?’ என்று சொல்லி அரசியலில் இருந்து பின் வாங்கினார்.

ஆனால் அதே மேடையில், `தென்னிந்திய நதிகளை இணைப்பது என் வாழ்நாள் கனவு. அதைச் செய்துவிட்டு இறந்தால் கூட எனக்குப் போதும்’ என்று முழக்கமிட்டார். மீண்டும் ட்விஸ்ட்டுடனே தனது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஜினி.

ஆனால், தொடர்ந்து தனது அரசியல் ஆலோசகர்களுடன் மீட்டிங் போட்டு, எதிர்காலம் குறித்து உரையாடிக் கொண்டும் இருக்கிறார் சூப்பர்ஸ்டார். இந்நிலையில், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

அதோடு விடாமல் பொதுத் தளமான ட்விட்டரிலும், `ஆக்கபூர்வமான சந்திப்பு’ என்று நிர்வாகிகளுடன் தான் உரையாடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மீண்டும் அரசியல் பொடி வைத்தே விடை பெற்றுள்ளார் ரஜினிகாந்த்.

அடுத்தடுத்து `காலா’, `2.0’ என்ற படங்கள் வரிசைக்கட்டி நிற்பதால ரஜினிக்கு, ரசிகர்களின் தேவை எவ்வளவு என்பது தெரியாதா என்ன?

More News >>