`அவெஞ்சர்ஸ் உடன் இணைந்த `பாகுபலிhellipஇது சீன மீம்ஸ் கொண்டாட்டம்!
By Rahini A
அவெஞ்சர்ஸ்’ மற்றும் `பாகுபலி’ திரைப்பட கதாபாத்திரங்களை இணைத்து சீன ரசிகர்கள் வெளியிட்ட மீம்ஸ்கள் வைரலாகி உள்ளன.
சில வாரங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் வெளியான `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை புரிந்து வருகிறது. இந்தப் படம் சீனாவில் சமீபத்தில் வெளியானது.
அதே நாளில், `பாகுபலி- 2’ படமும் ரிலீஸ் செய்யப்பட்டது. இரண்டு படங்களும் எதிர்பார்த்தது போலவே சீனாவிலும் சக்கைபோடு போட்டு வருகின்றன. உலக அளவில், அவெஞ்சர்ஸ் திரைப்படம் 1 பில்லியன் டாலர் வசூலை வாரிக் குவித்த நிலையில், பாகுபலி- 2 திரைப்படம் 500 கோடி ரூபாய் கலெக்ஷனை அள்ளியுள்ளது.
இதற்கு முன்னர் ஒரு இந்தியப் படம் இவ்வளவு பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பாகுபலி- 2 மற்றும் அவஞ்சர்ஸ் அதன் வசூலை இன்னும் பல கோடிகள் அதிகரிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
காரணம், சீனாவில் ஹாலிவுட் படங்களுக்கும் இந்தியப் படங்களுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு. அங்கு மட்டும் சுமார் 100 முதல் 500 கோடி வரை ஹிட்டாகும் படங்கள் வசூல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் வெளியான இந்த இரு திரைப்படங்கள் சீன ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டுள்ளன. இந்த இரு திரைப்படங்களையும் இணைத்து சீன ரசிகர்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். இதுதான் இன்றைய இன்டர்நெட் வைரல்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com