அமெரிக்க பள்ளிகள் தர வரிசை : லிபர்ட்டிவில்லே,nbspவெர்னன் ஹில்ஸ் சிறப்பிடம்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் செய்தி மற்றும் உலக அறிக்கை நிறுவனம், அமெரிக்க பள்ளிகளை கணித அறிவு மற்றும் எழுத்தறிவு ஆகிய காரணிகளை கொண்டு தர வரிசைப்படுத்தியுள்ளது. 20,500பள்ளிகளை இந்நிறுவனம் ஆய்வுக்குட்படுத்தியது.

இதில் லிபர்ட்டிவில்லே உயர்நிலைப்பள்ளி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் 12வது இடத்தையும்,அமெரிக்க அளவில் 447வது இடத்தையும் பெற்றுள்ளது. வெர்னன் ஹில்ஸ் மாகாண அளவில் 15லது இடத்தையும், தேசிய அளவில் 640வது இடத்தையும் பெற்றுள்ளது.

மாகாண அளவில் முதல் ஆறு இடங்களை சிகாகோ பொது பள்ளிகளும், ஏழாம் இடத்தை லிங்கன்ஷையரிலுள்ள ஸ்டீவென்சன் உயர்நிலைப்பள்ளியும் பெற்றுள்ளது. புரோவிஷா கணிதம் மற்றும் அறிவியல் பள்ளி, ஹிண்ஸ்டேல் சென்ட்ரல், ஜாண் ஹெர்ஸே, நெக்வா வேலி - யார்க் ஆகிய புறநகர் பள்ளிகளும் முதல் இருபது இடத்துக்குள் வந்துள்ளன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>