பிக்பாஸ் ஜூலியின் அரசியல் அறிவிப்பால் பரபரப்பு: வைரல் வீடியோ

தனியார் தொலைக்காட்சயின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிக்பாஸ் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழர்களின் மனதை வென்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களின் வெறுப்பபை தான் அதிகம் சம்பாதித்தார்.

ஆனாலும், இந்நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமடைந்தார். தனியார் தொலைகாட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருக்கும் ஜூலிக்கு பெரிய திரையில் வாய்ப்புகள் வருகிறது. படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதைதவிர விளம்பரங்களிலும் ஜூலி நடித்து வருகிறார்.இந்நிலையில், தான் அரசியல் கட்சி துவங்கப்போவதாக ஜூலி அறிவித்துள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ரஜினி அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? கமல் ஆட்சியை பிடிப்பாரா? மாட்டாரா ? ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் என்ன செய்ய போகிறார்? அப்பா முடியலடா சாமி. அப்போது நம்ம மக்களுக்கு யார் நல்லது பண்ண போகிறார்கள் ?. நாணும் துவங்க போகிறேன் ஒரு கட்சி. விரைவில் அறிவிக்கப்போகிறேன். காத்திருங்கள். ஒன்று சேர்ந்து வெல்வோம். என பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களை வெறுப்பேற்றி வருகிறது. நெட்டிசன்கள் ஜூலியை கலாய்த்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ:

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>