இனி போலீஸ் ஸ்டேஷனுக்கு வேணாம்..ஆப் மூலம் எப்ஐஆர் பதிவு செய்யலாம்

பொது மக்களின் தேவைக்காக இனி போலீஸ் ஸ்டேஷனுக்கே செல்லாமல், ஆன்லைனிலேயே புகார் பதிவு செய்யும் "சிட்டிசன் சேப்டி" ஆப் வசதியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி உள்ளார்.

குற்ற சம்பவங்களுக்கு எதிராக புகார் அளிக்க ஒவ்வொரு முறையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டும். என்ன ஆனாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தலை வெச்சிக்கூட படுக்கமாட்டேன் என்றெல்லாம் பலர் இருக்கின்றனர். குறிப்பாக, வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெரும்பாலான பெண்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிப்பதை அசௌகர்யமாக நினைக்கின்றனர்.

இதுபோன்று பொது மக்களின் பல்வேறு சூழ்நிலைகளை மனதில் கொண்டு போலீஸ் ஸடேஷனுக்கே செல்லாமல் ஆன்லைனில் புகார் பதிவு செய்யும் "சிட்டிசன் சேப்டி" ஆப் வசதியை கேரள மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை, கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிமுகம் செய்துள்ளார்.

இந்த ஆப் மூலம், அனைத்து காவல் நிலையங்களிலும் ஆன்லைனில் புகார் அளிக்க முடியும். ஆன்லைன் புகார் மீதான நடவடிக்கை குறித்தும் கண்காணிக்க முடியும். இதை தவிர, காவல் நிலையத்தில் பதிவு செய்யும் வழக்குகளின் எப்ஐஆர் காப்பி, காவல் துறையிடம் பெற வேண்டிய சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவையும் பெற்றுக்கெள்ளலாம்.

மேலும், சந்தேகத்துக்குரிய நிகழ்வுகள், காவல் துறையினருக்கு தகவல் அளித்தல், காணாமல் போனவர்கள் குறித்து குறிப்புகள் அளித்தல், வாகனம் எந்த ஒரு குற்ற செயலிலும் தொடர்பில்லை என்பதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குள் போன்ற பிற சேவைகள் கொண்ட வசதியும் இந்த ஆப்பில் இடம்பெற்றுள்ளன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>