ஒஹியோ பிரதிநிதித்துவ சபை தேர்தல் - அமெரிக்க இந்தியர் தேர்வு
ஒஹியோ பிரதிநிதித்துவ சபைக்கான தேர்தலுக்கு 7வது மாவட்டத்தின் ஜனநாயக கட்சி வேட்பாளராக அமெரிக்க இந்தியரான ஆசிஸ் அஹமது போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
7வது மாவட்டத்தில் பிறந்த அஹமது, ஸ்ட்ராங்க்ஸ்வில்லே உயர்நிலைப் பள்ளியில் 2013-ம் ஆண்டு பட்டம் பெற்றுள்ளார். பால்ட்வின் வாலஸ் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார். ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் மற்றும் கொள்கையியலில் முதுநிலை படித்து வருகிறார்.
நவம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில் ஆசிஸ் அஹமது, குடியரசு கட்சியின் வேட்பாளர் தாமஸ் பேட்டனை எதிர்கொள்ள இருக்கிறார். தாமஸ் பேட்டன், நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். செனட்டராகவும், பிரதிநிதியாகவும் பணியாற்றியவர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com