ஐந்தில் ஒரு பங்கு இந்தியர்கள் கலிபோர்னியாவில்!- அமெரிக்க சபை!

அமெரிக்காவின் ஹெச்4 விசாவில் வாழும் இந்தியர்களில் ஐந்தில் ஒரு சதவிகிதத்தினர் கலிபோர்னியாவில் உள்ளனர் என அமெரிக்க காங்கிரஸ் சபை அறிவிக்கை தெரிவிக்கிறது.

ஹெச்1பி விசா மூலம் ஐடி ஊழியர்களே அதிகளவில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பின்னர் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சூழல் இறுக்கமாகியுள்ளது.

அதாவது அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கான ஹெச்4 விசா நடைமுறைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அமெரிக்காவில் பணியாற்றுவோரின் துணைகளுக்கு வழங்கப்படும் விசா தரப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க காங்கிரஸ் சபை ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கென உள்ள அனுமதியுடன் ஹெச்4 விசா பெற்றிருப்பவர்களுள் 93% இந்தியர்கள்தான் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், ஹெச்4 விசா பெற்றுள்ள அமெரிக்கவாழ் இந்தியர்களுள் ஐந்தில் ஒரு சதவிகிதத்தினர் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இதில், 93% இந்தியர்கள், 5% சீனர்கள், மீதம் 2% இதர வெளிநாட்டினர் பெறும் ஹெச்4 விசாவில் 93% பெண்களுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளது. மீதம் 7% ஆண்கள் தான் ஹெச்4 விசா பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>