2019- ராகுல் பிரதமரா?- கலாய்த்த மம்தா பானர்ஜி!
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் பிரதமர் ஆவாரா..? என கேலி செய்யும் வகையில் பேசியுள்ளார் மம்தா பானர்ஜி.
சோனியாவுக்குப் பின்னர் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராகியுள்ளார் ராகுல் காந்தி. சமீப காலமாகத்தான் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் எல்லாம் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்று தான் பிரதமர் பதவியை ஏற்கப்போவதாகவும் ராகுல் கூறி வருகிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் அதிதீ நம்பிக்கை குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “ராகுல் காந்தி பிரதமர் ஆகப்போகிறாரா..? முதலில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டுமே?
இன்றைய சூழலில் காங்கிரஸ் தனித்து நின்றால் ஒருநாளும் வெற்றி பெற முடியாது. இனி வரும் காலங்களில் தேசியக் கட்சிகளை விடவும் மாநிலக் கட்சிகளின் மவுசுதான் அதிகரிக்கும். இதில் எந்த மாற்றமும் கிடையாது.
ஆனால், இன்றைய தேவை பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதாகும். முதலில் அதற்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com