ஐபிஎல் ஊழலை வெளிப்படுத்திய போலீஸ் அதிகாரி- நடுநிசியில் தற்கொலை!
ஐபிஎல் ஊழல், மும்பை தாக்குதல் போன்ற நாட்டின் மிகப்பெரும் பிரச்னைகளை விசாரித்த போலீஸ் அதிகாரி நேற்று நள்ளிரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருப்பவர் ஹிமான்சு ராய். ஐபிஎல் சூதாட்டம் குறித்து முதன்முதலி வெளி உலகத்துக்குத் தெரியும் படியாக விசாரணை நடத்தியவர் இந்த ஹிமான்சு ராய்.
மேலும் மும்பை தீவிரவாதத் தாக்குதல். வழக்கறிஞர் பல்லவி கொலைவழக்கு என நாட்டை உலுக்கிய முக்கியக் குற்ற வழக்குகளில் விசாரணை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். இவர் நேற்று நள்ளிரவு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கேன்சர் நோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார் ஹிமான்சு. இந்நிலையில், நோயின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து தன்னால் தொடர்ந்து சிகிச்சையின் வேதனைகளைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை என தற்கொலைக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தன்னுடைய துப்பாக்க்கியாலேயே தன்னை சுட்டுக்கொண்டுள்ளார் ஹிமான்சு.
இந்தத் தற்கொலைச் சம்பவம், மும்பை போலீஸார் மத்தியில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் உள்ள காவல்துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com